fbpx
Connect with us

Cinemapettai

நடிகைகளை திருமணம் செய்ய மாட்டேன் என ஒற்றைக்காலில் நிற்கும் சிம்பு.. ஏமாந்தது போதும் டா சாமி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகைகளை திருமணம் செய்ய மாட்டேன் என ஒற்றைக்காலில் நிற்கும் சிம்பு.. ஏமாந்தது போதும் டா சாமி!

தமிழ் சினிமாவில் சிறு வயதிலிருந்தே பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சிம்புவின் அப்பா டி ராஜேந்தர் குழந்தைப் பருவம் முதலே சிம்புவை சினிமாவில் நடிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து பெரிய நாயகனாக வலம் வருவார் என்று பார்த்தால் சர்ச்சை நாயகனாக உருவெடுத்து விட்டார். இது டி ராஜேந்தர் கொஞ்சம் வருத்தம்தான். அதுமட்டுமல்லாமல் இரண்டு முறை நடிகைகளை காதலித்து ஏமாற்றமடைந்தார் சிம்பு.

முதல் முதலாக பிரபல நடிகை நயன்தாராவுடன் வல்லவன் படத்தில் நடிக்கும்போது எசகுபிசகாக காதல் ஏற்பட்டு பொது இடங்களில் கூட கட்டி உரசி உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் அளவிற்கு நெருங்கி அன்புடன் இருந்தனர்.

ஆனால் இருவருக்கும் ஒத்துவராது என பிரிந்து விட்டனர்(எனக்கு மூணாவது, உனக்கு ஏழாவது கதைதான் நயன்தாராவுக்கு). அதன் பிறகு வாலு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகை ஹன்சிகா உடன் காதலில் விழுந்தார் நடிகர் சிம்பு. சரி, இதாவது கடைசி வரைக்கும் வரும் என எதிர்பார்த்தவருக்கு முட்டுக்கட்டை போட்டார் ஹன்சிகாவின் அம்மா.

அம்மா பேச்சை கேக்குறவங்க எதுக்கு காதலிக்கனும் என கடுப்பானார் சிம்பு. இதனால் தனது வீட்டாரிடம் சினிமா நடிகைகளை இனி விரும்ப போவதுமில்லை, திருமணம் செய்யப்போவதில்லை என உறுதியாக கூறிவிட்டாராம்.

இதுதான் சாக்கு என உடனடியாக தனது நெருங்கிய சொந்தக்காரப் பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டாராம் சிம்புவின் அம்மா உஷா. விரைவில் சிம்புவின் திருமணத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என சிம்புவின் நண்பரும் நெருங்கிய உறவினருமான விடிவி கணேஷ் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top