fbpx
Connect with us

Cinemapettai

சிம்புவிற்கு விடாத அந்த ஆசை.. எத்தனை முறைதான் படுவீங்க.. சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா

Tamil Nadu | தமிழ் நாடு

சிம்புவிற்கு விடாத அந்த ஆசை.. எத்தனை முறைதான் படுவீங்க.. சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா

தெலுங்கு படங்களை ரீமேக் செய்வதில் தமிழ் சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர் முன்னணி இயக்குனர்கள். அந்த வகையில் தெலுங்கில் 220 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த ‘ஆலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு கடும் போட்டி நிலவி வந்தது.

அதாவது ரீமேக் ராஜா என்று தமிழ் சினிமாவில் விமர்சிக்கப்படுவர் ஜெயம் ரவியின் அண்ணன். அவர் ஜெயம் ரவியை வைத்து, இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என்று பேசி வந்தார். ஆனால் ஜெயம் ரவி,ராஜா  கூட்டணியில் தனி ஒருவன் 2 அடுத்தபடியாக வரிசை கட்டி நிற்பதால் அவர்கள் ஒதுங்கி விட்டதாக தெரிகிறது.

சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக இந்த படத்தை வாங்கி ரீமேக் செய்யலாம் என்று களத்தில் இறங்கினார். அவரும் கிட்டதட்ட 3 படங்களில் கமிட்டாகி உள்ளாராம்.

ஆனால் சிம்பு, விஜய் சந்தர் இயக்கத்தில் ‘ஆலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தற்போது கோடம்பாக்கம் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய் சந்தர் ஏற்கனவே சிம்புவை வைத்து ‘வாலு’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானவர்.

‘ஆலா வைகுந்தபுரம்லோ’ படத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெட்ஜே, நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட 250 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ‘புட்ட போம்மா’ என்ற பாடல் உலகளவில் பிரபலமானது.

சிம்பு 2018-ல் தெலுகில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் நடித்துள்ளார். ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்புவின் டயலாக்கை வைத்து இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டதாம்.

சுந்தர்.சி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் வெளிவந்த அந்த படத்தில் சிலம்பரசன்,மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், நாசர், யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.

இந்த படம் தான் சிம்புவை அகல பாதாளத்தில் விழ வைத்தது, மறுபடியும் எப்படி தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது என்று ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

தற்போது தான் 4 முதல் 5 இயக்குனர்களின் படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் இதுபோன்ற முடிவுகள் எடுத்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா.? கையிலே காசு வாயிலே தோசை என்பது போன்று உள்ளது.

Continue Reading
To Top