Tamil Cinema News | சினிமா செய்திகள்
வித்தியாசமான டைட்டிலில் அடுத்து களமிறங்கும் சிம்பு… பர்ஸ்ட லுக் போஸ்டர் உள்ளே !

சிம்பு என்றாலே தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சை மட்டுமே நிலவி வந்தது. கதையில் தலையிடுவார், படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என குற்றச்சாட்டுகளுக்கு மேல் குற்றச்சாட்டு. இதெற்கெல்லாம் கவலை கொள்ளாமல் தனி ரூட் பிடித்து தான் இருப்பார் சிம்பு. அப்பாவின் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்தார். இதை தொடர்ந்து, டி.ராஜேந்தர் இயக்கத்தில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் பல வாய்ப்பு சிம்புவை தேடி வந்தது. எல்லா படத்திலும் தனது ஆக்ஷனால் ரசிகர்களை கவர்ந்தார். லிட்டில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த சிம்புவின் திரை வாழ்வில் பல படங்கள் மெகா ஹிட் கொடுத்தது. ஆனால், கடைசி சில வருடங்களாக சிம்புவின் படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. கடைசியாக நடித்த ’அஅஅ’ படமும் தோல்வியாக அமைந்தது. இருந்தும், தன்னம்பிக்கை எங்குமே விடாத சிம்பு தற்போது மெகா ஸ்டார் கூட்டணியில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.
இதேப்போல, சிம்பு அடிக்கடி தனி ஆல்பம் செய்து அதில் ஹிட் அடித்து வருவதை வாடிக்கையாக்கி கொண்டு இருக்கிறார். லவ் ஆன்தம் பாடிய சிம்புவிற்கு கிடைத்த வரவேற்புகள் எல்லாம் பீப் பாடலால அடியோடு மாறியது. பல இடங்களில் வழக்கு, மாதர் சங்கத்தின் எதிர்ப்புகளை சந்தித்தார். ஆனால், இது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது இல்லை யாரோ எடுத்து லீக் செய்துள்ளனர் என சிம்புவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், மீண்டும் ஆல்பத்துடன் களமிறங்கி இருக்கிறார் சிம்பு. ஆனால் இந்த முறை பாடல் எழுதுவதெல்லாம் இல்லை. பாட மட்டுமே செய்ய இருக்கிறார். பெரியார் குத்து என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஆல்பத்திற்கு மதன் கார்க்கி பாடல் எழுத, தமிழ் மணி இசையமைக்க இருக்கின்றனர். கண்டிப்பாக இப்பாடலில் சர்ச்சைகள் இருக்காது. சிம்புவின் சரியான கம்பேக் ஆல்பமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
