Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாநாடுக்கு பின் சைக்கோவுடன் கைகோர்க்கும் சிம்பு.. கொண்டாடவா? வேண்டாமா? என குழப்பத்தில் ரசிகர்கள்
சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் இரண்டாம் கட்டமாக நடந்து வருகிறது. பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன் என இதற்குமுன் வெங்கட்பிரபு படத்தில் நடித்த அனைவரும் மாநாடு படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் சினிமாவில் சரியாக பயணித்துக் கொண்டிருக்கும் சிம்புவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. சேரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
ஆனால் தற்போது சமீபத்தில் சைக்கோ படத்தை இயக்கி வெற்றி கொடுத்த மிஸ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்க போகிறார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிம்பு நடிப்பில் உருவாக இருந்த கெட்டவன் படம் முழுக்க முழுக்க சைக்கோவை மையப்படுத்தி எடுக்கப்பட இருந்ததாக அந்த படத்தின் இயக்குனர் கூறியிருந்தார்.
தற்போது உண்மையிலேயே சைக்கோவாக இருக்கும் இயக்குனர் என்றால் மிஸ்கின் தான். அவர் படங்கள் எல்லாம் அதே மாதிரிதான் இருக்கும். தற்போது சிம்பு மிஷ்கின் படத்தில் நடிக்க இருப்பதால் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராததால் அதற்கு வாய்ப்பில்லை எனவும் சிம்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
