Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவை நம்பி களமிறங்கும் குண்டு தயாரிப்பாளர்.. முரட்டு கூட்டணியா இருக்கே!

சிம்பு உடம்பை குறைத்ததில் இருந்தே அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். மார்க்கெட் இல்லை என்றாலும் அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருப்பதை பார்த்து கோலிவுட் வட்டாரமே பொறாமையில் உள்ளதாம்.

சிம்பு மற்றும் சுசீந்திரன் கூட்டணியில் சிம்புவின் ரீஎன்ட்ரீ படமாக அமைந்தது ஈஸ்வரன். ஆனால் படம் முதலுக்கு மோசம் இல்லை எனும் அளவுக்கு விடுமுறை தினங்களில் வெளியானதால் ஓரளவு கல்லா கட்டியது.

இருந்தாலும் சிம்புவை பழைய மாதிரி அதிரடியாக பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் தான் அடுத்ததாக வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் மாநாடு படம் வெளியாக உள்ளது. கண்டிப்பாக மாநாடு படம் சிம்புவுக்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என இப்போதே செய்திகள் வெளிவந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க தமிழ்சினிமாவில் ராசியில்லாத தயாரிப்பாளராக வலம் வரும் தயாரிப்பாளர் ஒருவர் சிம்புவை அடிக்கடி சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். நட்பு ரீதியாக சந்திப்பு இருந்தாலும் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படம் உருவாக்க உள்ளார்களாம்.

அவர் வேறு யாரும் இல்லை, தமிழ் சினிமா வட்டாரங்களில் குண்டு தயாரிப்பாளர் என செல்லமாக அழைக்கப்படும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் ரவீந்திரன் மற்றும் சிம்பு இடையே ஒரு நல்ல நட்பு வட்டாரம் உருவாகியுள்ளதாம்.

சமீபத்தில் சிம்புவைப் பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்து ஒரு பஞ்ச் டயலாக்குடன் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் “பார்த்தா தெரியுறது நடிப்பு, பழகினா தான் தெரியும் நட்பு, இவர் மேல சில பேருக்கு வெறுப்பு, அதற்கு அவர் இல்லை பொறுப்பு” என கூறியுள்ளார்.

simbu-latest-photo

simbu-latest-photo

Continue Reading
To Top