Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

18 வருடத்திற்கு பிறகு மீண்டும் அவருடன் கூட்டணி சேரும் சிம்பு.. ஏ டன்டனக்கா, ஏ டனக்குனக்கா!

சமீபகாலமாக தமிழ் சினிமாவை பொருத்தவரை எங்கு திரும்பினாலும் சிம்பு அப்படி இருக்கிறார், சிம்பு இப்படி இருக்கிறார் என்ற கூச்சல் பாடுகள் இருப்பதை பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம் சிம்பு சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வருவது தான்.

ஆனால் சமீபகாலமாக சிம்புவின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை முடித்து சுறுசுறுப்பாக இருக்கிறார். இந்நிலையில் 18 வருடத்திற்கு பிறகு மீண்டும் பிரபல இயக்குனர் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள செய்திதான் கோலிவுட் வட்டாரத்தையே தலைகீழாகத் திருப்பிப் போட்டுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக சிம்புவை அறிமுகமாக்கி காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஜொலிக்க விட்டவர் தான் டி ராஜேந்தர். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த டி ராஜேந்தர் ஒரு கட்டத்தில் ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி இயக்கத்தை கைவிட்டார்.

சமீபத்தில் டிராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு தனியாகவே ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கிவிட்டார். மேலும் அந்த தயாரிப்பாளர் சங்கத்திற்காக சிம்பு சம்பளமே வாங்காமல் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

அந்த படத்தின் லாபத்தை கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நடத்த முடிவு செய்துள்ளாராம் டி ராஜேந்தர். அதற்காகத்தான் அண்மையில் அவரது தாயார் சிம்புவுக்கு பிடித்த 45 லட்சம் மதிப்பிலான மினி கூப்பர் காரை வாங்கி கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் அந்தப் படத்தை டி ராஜேந்தர் இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் சினிமா வாசிகள். ஆனால் சிம்பு இப்போதைக்கு அந்த ரிஸ்க் எடுக்க மாட்டார் என்றே நம்பலாம்.

ஒருவேளை மீண்டும் சிம்பு மற்றும் டி ராஜேந்தர் கூட்டணியில் ஒரு படம் எப்படி இருக்கும்?

simbu-tr-cinemapettai

simbu-tr-cinemapettai

Continue Reading
To Top