Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்த அதிரடி காட்டும் சிம்பு.. ஆனா இந்த இயக்குனர் வில்லங்கம் ஆச்சே
தமிழ் சினிமாவில் அடிக்கடி தனக்குத்தானே எண்ணை ஊற்றி வழுக்கி விழும் நடிகர் என்றால் அது சிம்பு மட்டும்தான். திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் தனது ஸ்டார் அந்தஸ்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்.
தற்போது ஐயப்பனுக்கு மாலை போட்டு திரும்பி வந்தவுடன் சிம்பு அதனை உணர்ந்து விட்டார் போல. மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வெங்கட் பிரபுவின் மாநாடு படம் விரைவில் தொடங்க இருக்கிறது.
அடுத்து அதிரடியாக சூப்பர் ஸ்டாரை வைத்து இரண்டு படங்களை இயக்கிய பா.ரஞ்சித்துடன் சிம்பு இணைவதாக தகவல்கள் வெளிவந்தன. அதனை உறுதி செய்யும் வகையில் பா.ரஞ்சித், சிம்பு, கலையரசன் ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் சிம்பு தரப்பில் நட்பு சம்பந்தப்பட்ட சந்திப்பு என்றும் மற்றபடி வேறு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மாநாடு படம் அரசியல் சார்ந்த கதையில் உருவாகி வருகிறது.
பா.ரஞ்சித் படமும் கிட்டத்தட்ட அரசியல் சாயம் இருக்க வாய்ப்பு இருக்கும். அரசியல் மட்டும் அல்ல சாதி கொடுமைகள் பற்றியும் கண்டிப்பாக இருக்கும். அதுவே சரியான அளவில் இருந்தால் சிம்புவுக்கும் நல்லதுதான்.

simbu-ranjith
நெட்டிசன்கள், முதலில் நடிக்க சொல்லுங்கப்பா என சிம்புவை கிண்டல் செய்து வருகின்றனர்.
