Tamil Cinema News | சினிமா செய்திகள்
மிரட்டலாக வெளியான சிம்புவின் அடுத்த பட டைட்டில் லுக் போஸ்டர்.. புயல் வேகத்தில் வைரல்!
கடந்த சில வாரங்களாகவே சிம்புவின் திருவிளையாடல் தான் கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக உள்ளது. அடுத்தடுத்து தன்னுடைய அடுத்த பட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் சிலம்பரசன்.
அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ஆரம்பமான திரைப்படம்தான் கன்னட ரீமேக் படமான மப்டி. கொஞ்ச நாட்கள் படப்பிடிப்புக்கு சென்ற சிம்பு வழக்கம்போல் தன் வேலையை காட்ட படம் பாதியில் நின்றது.
அதன் பிறகு சிம்புவின் மாற்றம் தான் அனைவருக்கும் தெரியுமே. தற்போது ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு, மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகளில் பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து ஞானவேல்ராஜா தயாரிக்கும் கன்னட ரீமேக் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தின் தமிழ் தலைப்பை அறிவித்துவிட்டார். பத்து தல என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டிலில் போஸ்டரை தமிழ் சினிமாவைச் சேர்ந்த 10 முன்னணி இயக்குனர்கள் வெளியிட்டனர்.

pathu-thala-simbu
பத்து தல ராவணன் என்பதற்கேற்ப இந்த படத்தில் சிம்புவுக்கு நெகட்டிவ் கலந்த அதிரடி வேடம் என்கிறார்கள். ஜனவரியில் பத்து தல படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள இருப்பதாக அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது மாநாடு படத்தில் ஒரு வாரம் விடுமுறை எடுத்துள்ள சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டுள்ள புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
