மீண்டும் மீண்டும் நயன்தாரா ராசியில் அப்டேட் வெளியிடும் சிம்பு..பழசை மறக்காத எஸ் டி ஆர்

simbu nayanthara
simbu nayanthara

இந்த வருட தொடக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் பரவலாக வெற்றியை பெற்றது. தற்போது வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம் சிம்புவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

அதைத் தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் வெளியாக உள்ள அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முத்துவின் பயணங்கள் பற்றிய டீசர் தான் தற்போது வெளியாக உள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது. அதாவது நாளை டிசம்பர் 10 அன்று மதியம் 1.26 மணிக்கு  டீசர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த சிம்பு ரசிகர்கள் இந்த அறிவிப்பில் மற்றொன்றையும் கவனித்து வருகின்றனர். அதாவது 1.26 ஐ கூட்டினால் ஒன்பது வருகிறது. இதில் நயன்தாராவின் பிரதிபலிப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே மாநாடு திரைப்படத்தில் பல இடங்களில் நயன்தாராவின் சாயல் இருக்கிறது என்று ரசிகர்கள் போட்டோவுடன் மீம்ஸ் போட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த போஸ்டரிலும் நயன்தாராவின் சாயல் உள்ளது என்று கமென்ட் அளித்து வருகின்றனர்.

simbu
simbu
Advertisement Amazon Prime Banner