Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவிடம் சிக்கிய நடிகை.! தப்புவாரா.?
தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகர் என்றால் அது நம்ம சிம்பு தான் இவர் எப்பொழுதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொண்டே இருப்பார், ஆனால் செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு தான் உண்டு தன் வேலை உண்டு என்று கடமையை பின்பற்றுகிறார்.
இந்த நிலையில் சிம்பு தற்போது இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார், வெங்கட்பிரபுவின் மாநாடு படத்திலும் சுந்தர் சி யின் பெயரிடாத படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தின் ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க சில முன்னணி நடிகைகள் பரிசீலனையில் இருக்கிறார்கள், இறுதியில் விஜய் படத்தில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷிற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

keerthi suresh
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சர்க்கார் படம் மற்றும் விக்ரமின் சாமி 2, விஷாலின் சண்டக்கோழி 2, ஆகிய படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் மேலும் படத்தை சுரேஷ் காமாட்சி தான் தயாரிக்கவுள்ளார்
