simbu new movie

சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். ஒருசமயம் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், அஜித்தின் பில்லா படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்ற தனது ஆசையை பதிவு செய்திருந்தார்.

இதைப்பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா இசையில் அந்த படத்தை தான் இயக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். இதை சிம்புவும் ஆமோதித்திருந்தார். ஆனால் அந்த படம் குறித்து பின்னர் எந்த பேச்சும் எழவில்லை.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசிய வெங்கட் பிரபு, எங்கள் கூட்டணி 2018-ல் இணையும் என கூறியுள்ளார். ஆனால் அது பில்லா ரீமேக்கா என்பது குறித்து அவர் பேசவில்லை.