Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் சிம்புவின் மாநாட்டில் பஞ்சாயத்து.. இது எங்க போய் முடியுமோ
சிம்பு என்றால் அது வம்பு. இப்பொழுது தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து. ஆமாம் மாநாடு படத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்காக தயாரிப்பாளர் சங்கத்தில் இப்பொழுது கட்டப் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.
சுமார் ஐந்து வருட காலமாக சிம்பு எந்த படத்திலும் சூட்டிங்கிற்கு வருவதில்லை. காலதாமதம் வராமல் இருப்பது, தயாரிப்பாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது. எக்கச்சக்க பிரச்சனைகளுடன் இருக்கிறார் சிம்பு. எதற்காக இப்படி செய்கிறார் சிம்பு. காதல் பிரச்சனையா? இல்லை வாழ்க்கையே பிரச்சனையா? விசாரித்ததில் பதில் இன்னும் கிடைக்கவே இல்லை.
சிம்பு வேண்டுமென்றே செய்கிறாரா தெரியவில்லை. இன்று பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிம்புவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். இனி சிம்புவுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை என தெரிந்து கொண்ட சிம்புவின் உறவினர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க பேசிய கொண்டுள்ளனர்.
சிம்புவின் தாயார் நேரடியாக தயாரிப்பாளர் சங்கத்தில் சென்று பேசிக்கொண்டு உள்ளார். ஆக மொத்தத்தில் சிம்பு திருந்த வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமும். முதலில் சினிமாவில் சிம்பு நடிப்பதை விட முதலில் அவருக்கு ஒரு திருமணம் செய்து விட்டால் எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும்.
சிம்புவின் பெற்றோர் முதலில் சிம்புவின் பிரச்சனை பார்த்துவிட்டு பிறகு தயாரிப்பாளர்களின் பிரச்சனை பார்க்கலாம்.
