fbpx
Connect with us

Cinemapettai

16 வருடத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கும் சிம்பு.. இயக்குனர் இவர்தான்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

16 வருடத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கும் சிம்பு.. இயக்குனர் இவர்தான்!

என்னதான் சிம்பு மன்மத ஹீரோவாக வலம் வந்தாலும் ஒரு சில கிராமத்து படங்கள் அவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்துள்ளது.

அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான கோவில் படம் சிம்புவின் கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மன்மதன், சிலம்பாட்டம் போன்ற படங்களில் அங்கங்கே கிராமத்து வாசம் வந்தாலும் முழுமையான ஒரு கிராமத்து படத்தில் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிராமத்து கதையில் நடிக்க முடிவெடுத்துள்ளார் சிம்பு. அந்த வகையில் அந்த படத்தை இயக்கப் போவது வேறு யாருமல்ல.

வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சுசீந்திரன் தான். சமீபகாலமாக சுசீந்திரன் படங்களும் தொடர்ச்சியாக படுதோல்வியை சந்தித்து வருகிறது.

எப்படியாவது ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என சிம்பு மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் களமிறங்கியுள்ளதால் இந்த படம் பட்டையை கிளப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Continue Reading
To Top