Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சண்டை முடிந்து மீண்டும் சிம்புவுடன் இணையும் பிரமாண்ட கூட்டணி

ஆயிரம் சொன்னாலும் சிம்புவின் தேர்ந்தெடுக்கும் படங்கள் முன்னாடி மாதிரி இல்லை முன்பெல்லாம் சில சுமாரான படங்களில் நடித்து நிறைய தோல்விகளை சந்தித்தார். படிப்படியாக அவரும் மாற அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் ஏறிக் கொண்டே இருக்கிறது. அனைவரும் சிம்புவின் மீது குறை சொல்லிக்கொண்டே இருக்க திடீரென மணிரத்னம் படத்தில் நடித்து வெளிவந்து சக்கைபோடு போட்டது செக்கச் சிவந்த வானம்.

இப்பொழுது கௌதம் மேனன் படத்தில் இணைகிறார் அவருடன் ஏகப்பட்ட மோதல்கள் இருந்தாலும் படம் முடிந்து வெளிவந்து வெற்றி பெற்றபின் பல செயல் எல்லாம் மறந்து இணைந்து விட்டார்கள். ஆனாலும் இவர்கள் தொடங்கும் புது படத்திலும் பிரச்சினைகள் வரும் பின்பு வெற்றி பெற்றபின் மறந்துவிடுவார்கள். இது தொடர்கதையாகவே இருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா படம் சிம்புவின் கேரியரில் மிக முக்கியமான படம் இந்த அளவுக்கு அவரை லவ்வர் பாயாக வேறு எந்த படத்திலும் யாரும் காண்பிக்கவில்லை. சிம்புவின் பெண் ரசிகர்களும் அதிக அளவில் வந்ததும் இந்த படத்தில் தான். இப்பொழுது மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் எடுக்க உள்ளனர். அந்த படத்திலும் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என தோன்றுகிறது. சண்டை இல்லாமல் சீக்கிரம் எடுத்து வெளிவந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top