Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு அந்த நடிகையை காதலிப்பது உண்மைதான்.. சத்தமில்லாமல் ஒப்புக்கொண்ட TR
தமிழ் சினிமாவை பொருத்தவரை சர்ச்சை நடிகர் என்றால் அது நடிகர் சிம்புதான். தயாரிப்பாளர் பிரச்சனை முதல் காதல் பிரச்சனை வரை எதிலும் இவர் தான் நம்பர் 1.
ஆனால் சமீபகாலமாக சிம்பு பொறுப்பாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து மாநாடு மற்றும் சுசீந்திரன் படம் வெளியாக உள்ளது.
இது ஒருபுறமிருக்க சமீபத்தில் சிம்புவின் தந்தை டி ஆர் ராஜேந்தர் விநியோகஸ்தர்கள் தரப்பில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார்.
வழக்கம்போல் பத்திரிக்கையாளர்கள், அவர் எதற்கு கூப்பிட்டாரோ அதை விட்டுவிட்டு சிம்புவின் சொந்த விஷயங்களில் கேள்விகளை கேட்க ஆரம்பித்து விட்டனர்.
அதில் ஒன்றுதான் சிம்பு, த்ரிஷாவை காதலிக்கிறாரா? என்ற கேள்வி. கடந்த சில மாதங்களாகவே சிம்பு காதல் பற்றிய விவகாரம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.

simbu-trisha-cinemapettai
சிம்பு த்ரிஷாவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வதந்திகள் கிளம்பின. பெரும்பாலும் சிம்புவின் ரசிகர்களே அதை நம்பவில்லை.
இந்நிலையில் டிஆர்-ரிடம் பத்திரிக்கையாளர்கள் சிம்பு மற்றும் திரிஷா ஆகிய இருவரும் காதலிக்கிறார்களா என்று கேட்டதற்கு, இல்லை என்று பதில் சொல்லாமல் அவர் மழுப்பியது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
மேலும் சிம்பு மற்றும் திரிசா இருவரும் காதலிப்பது உண்மைதான் என்பதுபோன்ற நினைப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டார் டி ஆர்.
