Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹேர் கலரிங், ஸ்பைக், சால்ட் & பெப்பர் தாடி அடுத்த அவதாரத்தில் சிம்பு.. மிரளும் இணையதள புகைப்படம்
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சிம்பு தற்போது சபரிமலைக்கு மாலை போட்டு வெளிவந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இது மட்டுமில்லாமல் நயன்தாரா ஒரே சமயத்தில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கோவிலுக்கு சென்ற புகைப்படமும் மிகுதியாக ஷேர் செய்யப்பட்டது.
சிம்புவுக்கு மாநாடு படத்தின் மூலம் ஏற்பட்ட மன உளைச்சலால் கோவில் குளம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். மீண்டும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உடன் சுமுகமான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக புதிய கெட்டப்பில் சிம்பு வலம் வந்து கொண்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் சிம்பு மீண்டும் 10 வயது குறைந்தது போன்ற தோற்றத்தில் இருக்கிறீர் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் சென்னை லீலா பேலஸில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மீண்டும் மீண்டும் அடிபட்டு மேலே வரும் சிம்புவுக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ரசிகர்களுக்காக படங்களை உதாசீனப்படுத்தாமல் புதிதாக தன்னை தயார் படித்து வரும் சிம்புவுக்கு சினிமா பேட்டையின் வாழ்த்துக்கள்.

simbu-latest
