Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹாலிவுட் புகழ் தோர் கெட்டப்பில் கலக்கும் சிலம்பரசன்.. காட்டு வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
தமிழ் சினிமாவில் நடிகரும் டிஆர் மகனுமான சிம்பு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் மாநாடு மற்றும் ஈஸ்வரன். இந்த இரண்டு திரைப்படங்களையும் சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஏனென்றால் இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் வந்தா ராஜாவாகத்தான் வருவேன். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகி படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு 90 எம்எல் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் பல திறமைகளை கைக்குள் வைத்திருப்பவர் சிம்பு. இவர் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் போன்ற பல துறைகளிலும் கால் பதித்து அதில் வெற்றியும் கண்டார்.
ஆனால் சில காலமாக சிம்பு நடிக்கும் படங்களில் சரியான நேரத்திற்கு வரவில்லை என பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டது. ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் சிம்பு தனது வெற்றி நிரூபிப்பதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்டு உடல் எடை மற்றும் தோற்றத்தை மாற்றியுள்ளார்.

simbu new photoshoot
தற்போது சிம்பு ஃபோட்டோ ஷூட் ஒன்றை எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். அதில் ஹாலிவுட் ரேஞ்ச்சுக்கு தனது கெட்டப்பை மாற்றி வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மிரண்டுபோய் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
