Entertainment | பொழுதுபோக்கு
சிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா?
தமிழ் திரையுலகில் சிறந்த நடிகரான சிம்பு தற்பொழுது புத்தம்புது சொகுசு கார் ஒன்றை வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன் மதிப்பு நான்கு கோடி ஆகும்.
தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் தற்போது செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை கொடுத்தார். இவரது அடுத்த படமான சுந்தர்.சி இயக்கத்தில் “ வந்தா ராஜாவாகத்தான் வருவேன் ” எனும் படத்தில் நடித்து வருகிறார். இவரது சக போட்டியாளராக கருதப்படும் தனுஷ் ஃபோர்டு மஸ்டாங் எனும் காரை வாங்கி தமிழ் திரையுலகில் ஆச்சரியப்படுத்தினார்.

bently-continental
அந்த வரிசையில் சிம்பு Bentley கான்டினெண்டல் எனும் விலை உயர்ந்த காரை வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. காரை வாங்குவதற்காக சிம்பு டெமோ பார்த்துள்ளார். அதனால் விரைவில் காரை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
