fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு காதலிக்கும்போது கற்றுக் கொடுத்ததை மறக்காமல் பின்பற்றும் நயன்தாரா.. உண்மை காதல் இதுதானா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு காதலிக்கும்போது கற்றுக் கொடுத்ததை மறக்காமல் பின்பற்றும் நயன்தாரா.. உண்மை காதல் இதுதானா!

சிம்பு, நயன்தாரா ஒரு காலத்தில் எப்படி காதலித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒட்டி ஒரசி கட்டி பொது மேடைகளில் ஆட்டம் போட்டது கண்டு மொத்த சினிமா உலகமும் கண்ணு வைத்து விட்டது போல.

உடனடியாக அந்த காதல் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து நயன்தாரா பிரபுதேவா, விக்னேஷ் சிவன் என தன்னுடைய கணக்கை உயர்த்திக் கொண்டே போகிறார். அதேபோல் சிம்புவும் ஹன்சிகாவுக்கு பிறகு வேறு யாரையும் காதலிக்கவில்லை.

ஆனால் வல்லவன் படத்தின் போது இருவரும் காதலித்து கொண்டிருக்கையில் சிம்புவுக்கு பிடித்த ஒரு பழக்கத்தை நயன்தாரா கற்றுக்கொண்டு தற்போது வரை அதை கடைபிடித்து வருகிறாராம். அது வேறு ஒன்றும் இல்லை.

சிம்புவுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். பெண்களை எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு பிரியாணியும் பிடிக்குமாம். பிரியாணி சாப்பிட நயன்தாராவுக்கும் பழக்கப்படுத்தி உள்ளார் சிம்பு.

இதனால் அந்த சுவைக்கு அடிமையான நயன்தாரா தன்னுடைய உடல் எடையையும் பற்றி கவலைப்படாமல் பிரியாணியை ஒரு பிடி பிடிப்பாராம். அதுவும் ஹைதராபாத் தம் பிரியாணி என்றால் ஒரு கட்டு கட்டுவாராம்.

அதன் பிறகு உடல் எடையில் கட்டுக்கோப்பாக இருந்தாலும் பிரியாணி சாப்பிடுவதை நிறுத்தவில்லை. தற்போது வரை எங்கு சென்றாலும் எவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு சென்றாலும் நயன்தாராவின் முதல் ஆர்டர் பிரியாணி தானாம்.

உனக்கு பிரியாணி சாப்பிடும் பழக்கம் யாரிடமிருந்து வந்தது என விக்னேஷ் சிவன் கேட்டதற்கு சிம்பு தான் கற்றுக் கொடுத்தார் என்று ஓப்பனாக சொல்லிவிட்டாராம். என்ன இருந்தாலும் பழைய காதலனை விட்டுக்கொடுக்க மாட்டா போல என சோகத்தில் இருக்கிறாராம் நம்ம சிவன்.

Continue Reading
To Top