Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு நயன்தாரா திருமணம் நின்றது ஏன்? வெளிவந்த தகவல்
இயக்குனர் நந்து ‘கெட்டவன்’ என்ற படத்தில் சிம்புவை வைத்து இயக்குவதாக கூறப்பட்டது. அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் தனுஷிடம் கதை கூறினார் ஆனால் பிறகு சிம்புவை நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
சிம்பு மற்றும் நயன்தாரா பிரிந்ததற்கான பல காரணங்கள் கூறலாம். ஆனால் இயக்குனர் நந்து கூறுகையில் அவர்கள் இருவரும் ஜாதகம் பொருத்தம் பார்க்கும் போது திருவல்லிக்கேணியில் ஜோசியர் கூறியது என்னவென்றால் இருவரும் திருமணம் செய்து கொண்டால் சிம்புவின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரும் என்றும் நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
நயன்தாரா திருமணம் செய்யாமல் இருந்தால் சிம்புவுக்கு முதலமைச்சர் ஆவதற்கான தகுதி மற்றும் நேரம் அமையும் என்றும் அவர் கூறினார். இதுவே அவர்கள் இருவருக்குமான காதல் திருமணத்தில் இருந்து பிரிவதற்கான காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
ஆயிரம் பிரச்சினைகளில் சிம்புவும் நயன்தாராவும் இருந்தாலும் சிம்புவை நோக்கி பல டைரக்டர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் நயன்தாராவை நோக்கி பல டைரக்டர்கள் கதை சொல்கிறார்கள். இருவரும் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் நடிகை இவர்களை வைத்து படம் எடுத்தால் கண்டிப்பாக கல்லா கட்டும்.
இருந்தாலும் சிவாஜி படத்தில் வரும் சம்பவம் போல் இவர்கள் இருவரின் திருமண வாழ்க்கையை ஒரு ஜோசியக்காரன் முடிவு செய்து முடித்துவிட்டார். இல்லையென்றால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து ஒழுங்காக குடும்பம் நடத்தி சென்றிருப்பார்கள்.