Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரபுதேவாவை தொடர்ந்து சிம்புவுடன் நடிக்க போகும் நயன்தாரா.. பழைய காதலர்கள் படையெடுப்பால் பதட்டத்தில் விக்னேஷ் சிவன்

nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபுதேவாவை தொடர்ந்து சிம்புவுடன் நடிக்க போகும் நயன்தாரா.. பழைய காதலர்கள் படையெடுப்பால் பதட்டத்தில் விக்னேஷ் சிவன்

சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா(nayanthara) நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அது முற்றிலும் உண்மை இல்லை என்பதை போல விக்னேஷ் சிவன் அறிக்கை விட்டதாகவும் செய்திகள் கிடைத்தது.

இந்நிலையில் சிம்புவுடன் மீண்டும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்கப் போவதாக கோலிவுட் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசி வருகின்றனர். இந்த செய்தி தான் தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்.

சிம்பு நயன்தாரா நடிப்பில் உருவான வல்லவன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் போது இருவரும் அப்படி இப்படி ஒரு மாதிரியாக காதலர்களாக மாறினர். அதன் பிறகு பிரேக்கப் பண்ணிவிட்டு பிரபுதேவாவுடன் ஜாயின்ட் அடித்தார் நயன்தாரா. சிம்பு ஹன்சிகா பக்கம் தாவினார்.

பிறகு மீண்டும் சிம்பு நயன்தாரா இணைந்து இது நம்ம ஆளு எனும் படத்தில் நடித்து இருந்தனர். மீண்டும் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு விட்டதாக வதந்திகள் கிளம்பின. அதுவும் உண்மையில்லை என்பதை போல தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் ஊர் சுற்றி வந்தார் நயன்தாரா.

சமீபத்தில் பிரபுதேவா படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்ற செய்தியைத் தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் நயன்தாரா என இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மிஸ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு நயன்தாராவை கதாநாயகியாக மிஸ்கின் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் இதற்கு நயன்தாரா மறுப்பு தெரிவித்ததாகவும், மேலும் மிஸ்கினின் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தின் கதையையும் நிராகரித்து விட்டதாக அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியது.

தொடர்ந்து நயன்தாராவின் முன்னாள் காதலர்கள் மீண்டும் அவரை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளதால் சற்று பதட்டத்தில் இருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top