நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் மதுரை மைக்கல். இதில் நீளமான முடி வைத்து ஒரு வித்யாசமான கெட்டப்பில் அவர் நடித்துள்ளார். இந்த மதுரை மைக்கலின் டீசர் வரும் அக்டோபர் 8-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.