மூன்று வருடத்திற்கு முன் தொடங்கிய சிம்பு படம் இன்று நிறைவடைந்தது

simbuசிம்புவை நாயகனாக நடிக்க வைத்து படம் ஆரம்பித்தால் அது எப்படியும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு நடக்கும் என்று தெரிந்தே இன்று அவரை வைத்து ஒரு புதுப்பட பூஜை ஆரம்பமாகியுள்ளது. இதனிடையே, சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட “இது நம்ம ஆளு” படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாலையுடன் முடிவடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்க ஆச்சரியமான விதத்தில் 2013ல் “இது நம்ம ஆளு” படப்பிடிப்பு ஆரம்பமானது.

முதலில் ஏப்ரலில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட “இது நம்ம ஆளு” படம் தற்போது மே மாதத்தில்தான் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Comments

comments

More Cinema News: