fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சிம்புவின் அடுத்த படத்தையும் ஊத்தி மூடியாச்சி.. நான் சிவனேன்னு இருந்தாலும் சனி துரத்திட்டே இருக்கே

simbu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவின் அடுத்த படத்தையும் ஊத்தி மூடியாச்சி.. நான் சிவனேன்னு இருந்தாலும் சனி துரத்திட்டே இருக்கே

எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா என்ற கணக்காக கோலிவுட்டில் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அது சிம்புவை தான் முதன்முதலில் பாதிக்கிறது. அந்தவகையில் சிம்புவின் அடுத்த படமும் டிராப் ஆக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அதற்கு முன்னரே ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக்கை வைத்து மப்டி எனும் கன்னட படத்தின் ரீமேக்கை தயாரித்து வந்தார். கன்னட படத்தை இயக்கிய நாரதன் என்பவரே தமிழிலும் இயக்கி வந்தார்.

இந்நிலையில் கேஜிஎப் படத்தின் ஹீரோ யாஷ் நடித்து முடித்திருக்கும் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தை நாரதன் தான் இயக்க உள்ளாராம்.

இதனால் மப்டி படம் டிராப் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. எப்படியும் லாக் டவுனுக்கு பிறகு சிம்பு முதலில் வெங்கட்பிரபு படத்தில் தான் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதால் நாரதன் இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top