சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனங்கள் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடையே வெளிவந்திருப்பதால் இரண்டாவது நாள் வசூல் படுவீழ்ச்சி அடைந்தது. இதனால் பணம் போட்ட விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

simbu

முதல் பாகம் எதிர் பார்த்த வெற்றியை அடையாததால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் அனேகமாக ரத்து செய்யப்படலாம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இனியும் ஆதிக்கை நம்பி ஒரு பைசா கூட தயாரிப்பாளர் செலவு செய்ய மாட்டார் என்றே தெரிகிறது.

இந்த படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டவே பல மாதங்கள் ஆகும் என்பதால் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்பே இல்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிம்பு மற்றும் ஆதிக் ஆகிய இருவருக்குமே அடுத்த படம் ஒப்பந்தமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது

Simbu

அஜித்தின் ‘விவேகம்’ பட பாணியில் மீண்டு வருவேன் என்று சிம்புவை வைத்து படம் இயக்கிய இயக்குனர் கூறியிருக்கிறார்.

சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதில் சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா நடித்திருந்தார்கள்.

இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது.

simbu

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 80 சதவீதத்திற்கு மேல் முடிந்தும் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை விமர்சித்தும், இரண்டாம் பாகம் வருமா, வராதா என்று சிம்பு ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழலிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது.

நெவர் எவர் கிவ் அப். என் முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி. நான் மீண்டும் எழுந்து வருவேன்’ என அஜித்தின் ‘விவேகம்’ பட வசனத்தை பதிவு செய்திருக்கிறார்.