புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

சிம்புவின் ரூட்டை பாலோ பண்ணும் சூர்யா, சிவகார்த்திகேயன்.. காசு வேணும்னா எதுனாலும் செய்வாங்க

இரத்தம் இரத்தம் நீதான் என் இரத்தம் என்று ரசிகர்களை எப்போதும் தனது அன்புக் கட்டளையால் கட்டிப் போட்டு வைத்து இருப்பவர் நடிகர் சிம்பு. அவர் படம் வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி அவரின் படத்திற்காக காத்துக் கொண்டே இருப்பார்கள். அவரது ரசிகர்கள் சிம்புவின் படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும், படத்தை முட்டுக்கொடுத்து படம் சூப்பராக இருக்கிறது என்று கூறுவதிலும் அவர்களை அடித்துக் கொள்வதற்கு ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி ஒரு நடிகருக்கு ரசிகர்கள் என்பவர்கள் தான் மிகப்பெரிய பலமாக இருப்பார்கள் . ரசிகர்கள் இல்லை என்றால் அந்த நடிகர் ஒரு வெத்துவேட்டாகத்தான் சினிமாவில் இருந்து வருவார். அப்படி சிம்பு தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். ரசிகர்களுக்கு ஒன்று என்றால் முன்னாள் முதல் ஆளாக வந்து நிற்கக் கூடிய சிம்பு இன்றுவரை ரசிகர்களை ஒரு இடத்தில் அழைத்து சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருக்கின்றார்.

அதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். ஆனால் கொரோனா காரணமாக அந்த மிகப்பெரிய மீட்டிங் கேன்சல் ஆனது. ஆனால் விரைவில் ரசிகர்கள் அனைவரையும் அழைத்து சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சிம்புவைப் போல ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மற்ற நடிகர்களில் தற்போது மிக முக்கியமாக இருக்கக்கூடிய இரண்டு நடிகர்கள் இருக்கின்றனர்.

அதில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானதை உணர்ந்த சிவகார்த்திகேயன் இப்போது பிடித்தால்தான் உண்டு இல்லை என்றால் கைமீறிப் போய் விடும் என்ற பயத்தில் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று தனது ரசிகர் பட்டாளத்தை நேரில் சந்தித்து வருகிறாராம். அப்படி சந்திக்கும் போது அவரின் படங்கள் வேற லெவலில் மார்க்கெட் ஆவதற்கு அந்த ரசிகர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டு இதனை செய்து வருகிறார்.

இருவரில் மற்றொரு நடிகர் சூர்யா. சூர்யாவுக்கு என தனியாக ரசிகர்களை சந்தித்து அவர் புரமோஷன் தேட வேண்டும் என்ற அவசியமில்லை. இருந்தாலும் அவரும் தற்போது களத்தில் இறங்கி ரசிகர்களை சந்திக்க நேரில் செல்ல இருக்கிறார். எதற்கும் துணிந்தவன் படம் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் டிரைலர் நாளை ரிலீசாக உள்ளது.

இதனால் சூர்யா அவர்கள் மிகப்பெரிய ஒரு ரசிகர் மீட்டிங்கை ஏற்பாடு செய்திருக்கிறாராம். ஆனால் ரசிகர் கூட்டத்தில் சில முக்கியமான நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து இருக்கிறாராம் சூர்யா. சிம்புவை போல தற்போது மற்ற நடிகர்களும் ரசிகர்களின் ஆதரவை திரட்டும் வேலையில் இறங்கி இருக்கின்றனர். இதேபோல விஜய்யும் ஒரு சமயத்தில் ஊர் ஊராக சென்று தனது ரசிகர்களை சந்தித்துப் பேசினார். அதனால் பட்டி தொட்டி எங்கும் விஜய்யின் புகழ் போய் சேர்ந்தது.

அதனை அப்படியே அரசியலாக மாற்ற நினைத்த போதுதான் விஜய் சுதாரித்துக்கொண்டு அதன்பிறகு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பழக்கத்தை விட்டு விட்டார். அதே போல இவர்களும் தற்போது ஆரம்பித்திருக்கின்றனர். இவர்கள் தங்களின் பட புரமோஷனுக்காக இப்படி செய்தாலும் இதையும் அரசியலாக்க சில கூட்டங்கள் இருக்கத்தான் செய்யும். எது எப்படியோ ரசிகனை மதிக்கத் தெரிந்த நடிகன் மட்டுமே தமிழ் சினிமாவில் வெகு காலம் நிலைக்க முடியும்.

Trending News