செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

டேடிங் விடுங்க, கல்யாணம் பண்றதா ஐடியா இருக்கா.? ஷாக்கான பதிலை கூறிய சிம்பு

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அண்மையில் நடைபெற்ற மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனக்கு ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க, ரொம்ப கஷ்டப்பட்டேன், பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் என்ன நீங்க பார்த்துக்கங்க என மேடையிலேயே சிம்பு கண்ணீர் மல்க பேசினார்.

மாநாடு படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து தி லூப் என்ற பெயரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மாநாடு படத்தின் தெலுங்கு பதிப்பின் புரமோஷனுக்காக சிம்பு ஹைதராபாத் சென்றிருந்தார்.

நீண்ட காலத்திற்கு பிறகு சிம்புவின் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சிம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெலுங்கு படத்தில் நடிக்க தயாராக உள்ளேன், நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என்று கூறினார்.

simbu
simbu

இனிமேல் சிம்பு நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலுமே வெளியாகும் என அந்த பேட்டியில் கூறினார். அப்போது திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே நல்ல பொண்ணு இருந்தால் சொல்லுங்கள் என மழுப்பலாக பதிலளித்தார்.

சிம்பு மாநாடு படத்தை தொடர்ந்து கொரோனாகுமார் படத்தில் பேஷன்ட் ஆக நடிப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ மேனனின் வெந்து தணிந்த காடு படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement Amazon Prime Banner

Trending News