fbpx
Connect with us

Cinemapettai

லாக் டவுன் முடிந்தவுடன் திருமணத்தில் லாக்காகும் சிம்பு.. பொண்ணு யாரு தெரியுமா? கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாக் டவுன் முடிந்தவுடன் திருமணத்தில் லாக்காகும் சிம்பு.. பொண்ணு யாரு தெரியுமா? கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

சில காலங்களாக சினிமாவை விட்டு விலகியிருந்த சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அவர் போராத காலம் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க லாக் டவுன் முடிந்தவுடன் சிம்புவிற்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். அதாவது 37 வயதாகும் சிம்பு தற்போது வரை கல்யாணம் செய்து கொள்ளாமல் கன்னி பயனாகவே இருந்துவிட்டாராம்.

அப்படி சொல்ல முடியாது முதலில் நயன்தாராவுடன் காதல், பின்பு ஹன்சிகாவுடன் காதல் என்று லிஸ்ட் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் லவ் செட் ஆகவில்லை சிம்புவின் திறமைக்கு மயங்கி பெண்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள் என்பது உண்மைதான்.

ஆனாலும் குடும்ப பாங்கான பெண் வேண்டுமென்று தூரத்து சொந்தக்கார பெண்ணை நிச்சயம் செய்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பெரிய இடத்து சம்பந்தம் அதுமட்டுமில்லாமல், லண்டனில் ஒரு சில காலேஜுக்கு முதலாளியாம்.

சிம்புவும் இதற்கு தலை அசைத்து விட்டார் என்பதுதான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி, அதாவது சினிமா கூடிவரும் நேரத்தில் திருமணம் செய்து கொண்டால் தான் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்த முடியாது என்ற ஒரு பயமும் இருக்கிறது.

ஆனாலும் உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது, தனது மூத்த மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலை டி.ராஜேந்திரனுக்கு கவலை வாட்டி வதைத்து தான் உள்ளது.

சிம்புவுக்கு விரைவில் கெட்டிமேளம் கொட்டும் என்று அவர் உயிர் நண்பர் வி.டி.வி கணேஷ் கூறியது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது. மாநாடு படம் முடிந்தவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தை கௌதம் வாசுதேவன் தயாரிக்க உள்ளார். அதற்க்கான ஒத்திகையாக சிம்பு மற்றும் திரிஷாவை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் குறும் படத்தை வெளியிட்டார்.

கவுதம் மேனனுக்கு ஒரு சில இயக்குனர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மனதில் இப்போது ஒரே கேள்வி கிளம்பியுள்ளது பட வாய்ப்புகள் குவியும் நேரத்தில் திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கையிலும் சரி, சினிமா வாழ்க்கையிலும் சரி எப்படி வெற்றி பெறுவார் என்பது தான்.

Continue Reading
To Top