Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு-வுக்கு கல்யாணம்! டி ராஜேந்தர் திடீர் முடிவு
தமிழ் சினிமாவின் இளம் நடிகரான சிம்புவுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என அவர் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரும் அதற்கு செவி கொடுத்தவாறு இல்லை. அவரது கவனம் முழுவதும் சினிமாவில் மட்டுமே உள்ளது இப்பொழுதுதான் கொஞ்சம் நல்ல நல்ல திரைப்படமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இன்னும் கொஞ்ச நாள் போனால் ஹிந்தியில் சல்மான்கான் போன்று மன நிலை மாறினாலும் மாறும். செக்கச் சிவந்த வானம் கொடுத்த வெற்றியில் அவர் தொடர்ந்து அடுத்த நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருடைய தந்தை டி ராஜேந்தர் அவரது திருமணம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
டி ராஜேந்தர் தினத்தந்தியில் அளித்த பேட்டியில் ‘சிம்பு என்னிடம் பெண் பார்க்க சொல்லிவிட்டார், நீங்களே ஒரு நல்ல பெண்ணை பாருங்கள் என்றார். அதற்காக நானும் பெண் தேடி வருகின்றேன், இனி கடவுள் தான் அந்த பெண்ணை காட்ட வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஆனால் ஒன்று சிந்துவிற்கு திருமணம் நடந்தால் இன்னும் நல்ல முதிர்ச்சியான வேடங்களில் கூட நடிப்பார்.
simbu
