Tamil Cinema News | சினிமா செய்திகள்
இருக்கு இனி தான் இருக்கு சிம்புவின் மாநாடு.! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட வெங்கட்பிரபு
நடிகர் சிம்பு வந்தா ராஜாவை தான் வருவேன் என்ற படத்தை தொடர்ந்து 90ml படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்திருந்தார், அதன் பிறகு ஹன்சிகா நடித்துவரும் மஹா திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார், இதன் படபிடிப்பில் சிம்பு சமீபத்தில் தான் கலந்துகொண்டார் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.
இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படம் எப்போது தொடங்கும் என இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது, தற்போது படம் தொடங்கும் மாதத்தை அறிவித்துள்ளார் வெங்கட் பிரபு.
இந்த மாதம் மாநாடு படத்தை தொடங்க இருக்கிறார் வெங்கட் பிரபு இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் படத்தின் இசையமைப்பாளரையும் அறிவித்துள்ளார், படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா தான் இசையமைக்க இருக்கிறார், சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் கமிட்டாகியுள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் திரைப் படமாக அமைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
And yes we are back!!! Here is the update which u guys kinda know by now!! But now it’s official ?!!! Me and @thisisysr are back for #str ‘s #maanaadu #avppolitics #vp9 @sureshkamatchi #isaimaanaadu #HappyEid my brother!!! ? pic.twitter.com/iRE19FQZBS
— venkat prabhu (@vp_offl) June 5, 2019
