பிரேமம் இயக்குநருடன் சிம்பு-மம்முட்டி புதிய கூட்டணி?

மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, மடோனா செபஸ்டின், சாய் பல்லவி மற்றும் அனுபமா  நடித்து மலையாளத்தில் வெளியாகி, கேரளாவில் மிகப்பெரிய அளவில் வெற்றியை ருசித்த படம் பிரேமம். மேலும் இன, மொழி வேறுபாடின்றி தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், சென்னையில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. குறிப்பாக நிவின்-சாய் பல்லவி ஜோடியின் காதல் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து, பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது. பிரேமம் படத்திற்கு பிறகு ஒருவருடமாக, தனது புதிய படத்திற்கு கதை எழுதிவந்த அல்போன்ஸ், தமிழில் முன்னணி நடிகருடன் இணையவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது, அந்த படத்தில் தமிழ் நடிகருடன் முக்கிய கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்க உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிம்புவிடம் கதை கூறிய அல்போன்ஸ், விரைவில் சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக  கூறப்பட்டது. சிம்பு-அப்போன்ஸ்-மம்மும்டி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும்  பேசப்படுகிறது.

Comments

comments

More Cinema News: