மாநாடு சேட்டிலைட் ரைட்ஸ் என்கிட்ட கொடுங்க.. புத்திசாலித்தனமாக காய் நகர்த்தும் பிரபலம்

கடந்த சில நாட்களாகவே திரும்பிய பக்கமெல்லாம் கேட்கும் பெயர் மாநாடு தான். ஒரு பக்கம் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். மற்றொரு பக்கம் இப்படத்தின் பஞ்சாயத்து முடியாமல் நீண்டு கொண்டே செல்கிறது. படம் தொடங்கியது முதல் வெளியாகும் கடைசி நேரம் வரை பிரச்சனை இருந்தது என்று தான் நினைத்தோம். ஆனால் இன்னும் இந்த பஞ்சாயத்து முடியவில்லையாம்.

ஆமாங்க மாநாடு படம் வெளியாகும் கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டது. அந்த சமயத்தில் உடனடியாக பணம் தேவைப்பட்டதால் உதயநிதி மூலம் மாநாடு படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவிக்கு விற்கும் பட்சத்தில் வியாபாரம் பேசப்பட்டுள்ளது. ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்பார்த்த பணத்தைவிட கலைஞர் டிவி குறைவான தொகைக்கே வாங்கியுள்ளது.

அந்த சமயத்தில் வேறு வழியில்லை என்பதால், 6 கோடிக்கு சம்மதம் தெரிவித்து படத்தை கலைஞர் டிவிக்கு கொடுக்க சுரேஷ் காமாட்சி சம்மதித்துள்ளார். ஆனால் தற்போது சிம்புவின் தந்தை டிஆர் புதிய பஞ்சாயத்தை கொண்டு வந்துள்ளாராம். அதன்படி சிம்புவின் படத்துக்கு மார்கெட் விலை அதிகம், அதை 6 கோடிக்கு கொடுத்தால் எப்படி?

நெருக்கடி காரணமாக இந்த விலைக்கு கொடுத்துவிட்டால் அடுத்த படம் வரும் போதும் இப்படித்தான் கேட்பார்கள் என டிஆர் கூறுகிறாராம். மேலும் கலைஞர் டிவி சார்பாக உதயநிதி கொடுத்த 6 கோடியை நான் கொடுக்கும் பணத்தை வைத்து திரும்ப கொடுத்துவிடுங்கள்.

சாட்டிலைட் உரிமையை நான் வாங்கி கொள்கிறேன் என டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கூறியுள்ளாராம். இதனால் பிரச்சனை என்றவுடன் உதவிய உதயநிதி முக்கியமா? பல பிரச்சனைகளில் கூட நின்ற டி.ராஜேந்தர் முக்கியமா? என்ற குழப்பத்தில் தவித்து வருகிறாராம் சுரேஷ் காமாட்சி.

சிந்துபாத்தும் கன்னித்தீவும் தொடர்கதையை போல சிம்புவின் பிரச்சனை ஒரு முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு எப்போதுதான் எண்டு கார்டு வரும் என்று தான் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு புதிய பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்