fbpx
Connect with us

Cinemapettai

நைட்ல நயன்தாரா.. பகல்ல ஹன்சிகா.. மன்மதனின் காதல் லீலைகள்

simbu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நைட்ல நயன்தாரா.. பகல்ல ஹன்சிகா.. மன்மதனின் காதல் லீலைகள்

ஒருகாலத்தில் சிம்பு என்றால் மயங்காத நடிகைகளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவு வசீகரமான நடிகராக வலம் வந்தவர். இன்று முன்னணி நாயகிகளாக இருக்கும் நடிகைகளுக்கு முதல் ஓனர் என்ற பெருமை சிம்புவுக்கு உண்டு.

இந்நிலையில் தன் பழைய காதலிகளான நயன்தாரா மற்றும் ஹன்சிகாவுடனான காதல் தோல்வியை பற்றி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார் சிம்பு. சிம்புவும் நயன்தாராவும் ஒருவரை ஒருவர் எப்படி காதலித்து கொண்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவெளியில் லிப் டு லிப் கிஸ் அடிச்சு அதை அவர்களே போட்டோ எடுத்து வெளியீட்ட காலம் எல்லாம் உண்டு.

simbu-nayanthara

simbu-nayanthara

இன்று எவ்வளவோ பேர் நயன்தாராவை காதலிக்கலாம். ஆனால் அதற்கு விதை போட்டவர் சிம்பு தான். அதேபோல் வாலு படத்தின் போது ஹன்சிகா சிம்புவை காதலித்தார். அதேபோல் இருவரும் ஒட்டி உரசி கட்டிக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஒரு ஆட்டமாடி விட்டது.

simbu-hansika

simbu-hansika

இந்நிலையில் திடீரென இருவரின் காதலையும் இழந்து தனிமரமாகிவிட்டார் சிம்பு. அதன் பிறகு அவரவர்கள் அவர்களின் பாதையில் சென்று விட்டனர். அதன் பிறகு சிம்பு படங்களில் நடிக்காமல் மனவேதனையில் போதைக்கு அடிமையாகி விட்டதாக சொல்லப்பட்டது. இரவு பகலாக அழுவது ஒன்றுதான் எனக்குத் தெரிந்த விஷயம் எனவும் சோகமாக கூறியுள்ளார்.

இருந்தும் அவர்களைப் பற்றி எந்த ஒரு தவறான செய்தியும் பரப்பாமல் நேர்மையாக இருந்ததால் சிம்புவின் மீதான மரியாதை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது மீண்டும் ஹன்சிகா சிம்புவுடன் வலம்வர ஆரம்பித்துள்ளார்.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிக்கு இறக்கை முளைச்சுருச்சு.. பறந்து போயிருச்சு..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top