fbpx
Connect with us

Cinemapettai

2020-ல் மிரட்ட போகும் சிம்பு.. மாஸான படத்தின் பார்ட்-2 விரைவில்

simbu-osthi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2020-ல் மிரட்ட போகும் சிம்பு.. மாஸான படத்தின் பார்ட்-2 விரைவில்

சிம்பு என்றாலே வம்பு தான் என்கிறது கோலிவுட். ஆனால் உண்மையிலேயே சிம்பு அளவுக்கு ரசிகர்கள் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முன்னணி நாயகர்களின் லிஸ்டில் இருக்க வேண்டிய ஆள் தான்.

விண்ணைத்தாண்டி வருவாயா, குத்து, தொட்டி ஜெயா போன்ற மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்தவர் சிம்பு. தற்போது படங்களில் நடிக்காமல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதனாலேயே பல ரசிகர்கள் சிம்பு ஏன் இப்படி செய்கிறார் எனப் புரியாமல் தவித்து வருகின்றன.

இந்நிலையில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த மாநாடு படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் படுசுறுசுறுப்பாக மீண்டும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரப்புவதற்கு ரெடியாகி விட்டார் சிம்பு.

அதனைத் தொடர்ந்து தரணி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த ஒஸ்தி படம் மாஸ் வெற்றி பெற்றது. தற்போது சிம்பு மீண்டும் போஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த தகவல் மட்டும் உண்மையானால் சிம்பு ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடியாது என்பது உண்மை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top