simbu lawrence

மாணவர் போராட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட இருபெரும் நடிகர்களாக திகழ்கிறார்கள் சிம்புவும் லாரன்சும். தடியடி நடந்து ஆறேழு நாட்கள் கழித்துதான் முழு வேகத்தோடு கிளம்பியிருக்கிறார்கள் இருவரும். லாரன்ஸ் முதல்வரை சந்திக்கப் போன அதே நேரம், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிம்பு. இது ‘அவசர பிரஸ்மீட்’ என்று சொல்லப்பட்டது நிருபர்களுக்கு. தடியடி மற்றும் கலவரம் நடந்து ஒரு வாரம் கழித்து இது பற்றி பொங்க வேண்டிய அவசியம் என்ன?

அதிகம் படித்தவை:  கடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய டீசர் இதோ.!

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டி நடிகர் லாரன்ஸ் முதல்வரை சந்தித்து பேசப் போனார் அல்லவா? அதுதான் காரணமாம். நியாயமாக லாரன்சுக்கெல்லாம் முன்பு ஜல்லிக்கட்டு போராட்த்திற்கு குரல் கொடுத்தவர் சிம்புதான். அதுமட்டுமல்ல… இப்படியொரு போராட்ட வழியை மாணவர்களுக்கு காட்டியதே அவர்தான். இப்படி பிள்ளையார் சுழி போட்ட நமக்கு வர வேண்டிய புகழை, மூன்று நாட்கள் கழித்து உள்ளே வந்த லாரன்ஸ் தட்டிக் கொண்டு போவதா என்கிற வெறுப்பில்தான் அவசர பிரஸ்மீட்டை கூட்டி, “என்னை கைது செய்ங்க. இல்லேன்னா மீனவர்களை விடுதலை செய்ங்க” என்று முழங்கியிருக்கிறார் சிம்பு.

அதிகம் படித்தவை:  பாத்ரூமில் போட்டோ ஷூட் நடத்திய கண்ணக்குழி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.!

சிம்பு நினைத்த மாதிரிதான் நடந்தது எல்லாம். ஊடகங்கள் லாரன்ஸ் செய்தியை எட்டு பாயின்ட்டிலும், சிம்பு செய்தியை பதினெட்டு பாயின்டிலும் வெளியிட்டன. சிம்புவின் விளம்பர வேகத்தின் முன், சைலன்ட் ஆகிவிட்டது லாரன்ஸ் முதல்வர் சந்திப்பு.