சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.

அறிமுக இயக்குனர் ஆனந்த் பல்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் டீசரை, சந்தானத்தின் நண்பரும், வழிகாட்டியுமான சிம்புவின் பிறந்தநாளான இன்று (பிப் 3) சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று’

எனும் திருக்குறளை முன்வைத்து துவங்கும் இந்த டீசரில், என்ஜினியரிங் மாணவரான சந்தானம் சமையல் கலை பயின்று அது தொடர்பான போட்டியில் பங்கேற்பது போன்று உருவாகியுள்ளது.

https://twitter.com/iam_str/status/827321879903887360

சந்தானதுக்கே உரிய நக்கல், நய்யாண்டி பாணியில் உருவாகியிருக்கும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் சந்தானம் டூப் போடாமல் சில சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.