கொல மாஸாக வெளிவந்த சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. முரட்டு சிங்களுக்கு குவியும் லைக்ஸ்

திரைப்படத்திற்காக நடிகர்களின் கடின உழைப்பை ரசிகர்கள் எப்போதும் பாராட்டுவார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் ரசிகர்களின் கடின உழைப்பு இருக்கும். அதில் உடல் அமைப்பை மாற்றுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த வகையில் தற்போது சிம்புவின் புகைப்படம் தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது எப்படி இருந்த சிம்பு திரைப்படத்திற்காக இப்படி உடலை வருத்தி இருக்கிறார் என்று வியந்துள்ளனர் ரசிகர்கள்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் சிம்பு 18 வயது சிறுவன் போல தோற்றமளிக்கிறார். இது சிம்புவின் நாற்பத்து ஏழாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா இந்த திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் மேனனுடன் கைகோர்க்கிறார் சிம்பு.இத்திரைப்படம் கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“வந்தா ராஜாவா தான் வருவேன்” என்ற திரைப்படத்தில் சிம்புவின் உடலமைப்பை பலரும் பல விமர்சனங்கள் செய்து வந்தனர். அதை தொடர்ந்து ஈஸ்வரன், மாநாடு திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து முன்பு இருந்தது போலவே பழைய சிம்புவாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

simbu
simbu

தற்போது மேலும் ஒரு படி மேலே போய் தன் உடல் எடையை பாதியாக குறைத்து சிறு பையன் போல காட்சியளிக்கிறார். இவ்வாறு உடல் இளைத்த புகைப்படம் தான் தற்போது ட்ரெண்டிங் ஆக உள்ளது. ரசிகர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்