Tamil Cinema News | சினிமா செய்திகள்
எப்ப சார் சூட்டிங் போறது? அடம்பிடிக்கும் சிம்பு.. ஆச்சரியத்தில் கோலிவுட்
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவர் கூட சிம்புவை இதுவரை நல்லவர் என்று சொல்லியதே கிடையாது. ஏன் ஒரு சில சமயத்தில் அவர்கள் செய்யும் தப்பை கூட சிம்புவின் மீது போட்டு விடுவார்கள். அதையும் மக்கள் நம்பி விடுவார்கள்.
அதற்கு காரணம் சிம்புவின் மீது எப்போதுமே ஒரு சிலர் சர்ச்சை கருத்துக்கள் இருந்து கொண்டே இருக்கும். அதை எல்லாம் பார்க்கும்போது அவருக்கே சிரிப்புதான் வரும். இருந்தாலும் அனைவரையும் நம்ப வைத்து விடுவார்கள்.
ஆனால் தனக்கு சரியாக இருப்பவர்களிடம் சிம்புவும் சரியாக இருந்திருக்கிறார் என்பதற்கு பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சான்று. சமீபத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவா தான் வருவேன் படம் கூட குறித்த நேரத்தில் வெளியீடு செய்யப்பட்டது.
சிம்புவுடன் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறாரோ அதற்கு தகுந்தாற் போல் தான் அவரது கேரக்டர் இருக்கும் என்பதை தெளிவாக காட்டி விட்டது அந்த படம். அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் பல தடங்கல்கள் வந்தாலும் ஆரம்பித்த பின்னர் சுறுசுறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இடையில் கொரானா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
மேலும் மாநாடு படத்திற்கு அதிகப்படியான நடிகர்கள் தேவை என்பதால் தற்காலிகமாக அந்தப் படத்தைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அதே படக்குழுவினரை கொண்டு சிறிய பட்ஜெட்டில் வேறு ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்பு உடனடியாக அந்த படத்தை எடுத்து முடிக்க உள்ளார்களாம். சிம்புவும் எப்போது சூட்டிங் என சுரேஷ் காமாட்சியிடம் கேட்டு வருகிறாராம்.
அதுமட்டுமில்லாமல் தனது உடல் எடையை குறைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறாராம். தற்போது சிம்பு பாதியாக இழைத்து விட்டதாக செய்திகள் கிடைத்துள்ளது. விரைவில் அவரின் புது புகைப்படம் வெளிவரும் என தெரிகிறது.
