Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவின் தவத்தை கலைக்கும் அந்த அறிவிப்பு ரிலீஸ்! இணையத்தில் குவிந்த ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் மூலம் அறிமுகமாகி, பன்முக திறமையினால் முன்னணி நடிகராக விளங்குபவர் சிம்பு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘மாநாடு’ படத்தை தன்வசம் வைத்துள்ளார் சிம்பு.
நயன்தாராவை அடுத்து ஹன்சிகாவின் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்ளவிருந்த நிலையில் தனது அம்மாவின் பேச்சை கேட்டு காதலை முறித்துக் கொண்டார் ஹன்சிகா.
அதன் பின் கட்ட பிரம்மச்சாரியாராக இருக்கும் சிம்பு, தற்போது ஊடகங்களில் வாயிலாக டிசம்பரில் நல்ல செய்தி வெளியாகும், என்ற தகவலை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
டிசம்பரில் சிம்பு தனது திருமணத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட போகிறாரா? என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் டிசம்பருக்குள்ளே, சிம்புவின் சீக்ரெட் ரிலீஸ் ஆகிவிடும் என்று சமூக வலை தளங்களை நோக்கி ரசிகர்களின் கூட்டம் பாய தொடங்கி உள்ளனர்.
ஒருவேளை சிவப்பு ரோஜா இரண்டாம் பாகத்தைப் பற்றிய புது அப்டேட்டை சிம்பு வெளியிடுவாரோ? என்றும் ரசிகர்கள் தங்களுக்குள்ளேயே கிசுகிசுக்கின்றனர்.
