தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு, மேலும் இவரை பற்றியும் இவரை சுற்றி நடக்கும் சர்ச்சைகள் பற்றியும் நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை இவர் கடந்த சில வருடங்களாக நடிப்பில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்தார் அதனால் பலர் இவரை பற்றி தவறான விமர்ச்சனத்தை முன் வைத்தார்கள்.

Simbu

அது மட்டும் இல்லாமல் இயக்குனர்களையும் பாடாய் படுத்தினார் என கூறபடுகிறது, இவர் முன்பு உடல் எடை தாறுமாறாக ஏறி ஆளே அடையாளம் தெரியாமல் குண்டாக இருந்தார், இவர் நடிப்பில் வெளியான AAA தயாரிப்பாளர் கொடுத்த பெட்டியில் சிம்புவின் இமேஜ் தாறுமாறாக அடி வாங்கியது, அதனால் ஒரு மாஸ் ஹிட் படம் கொடுக்க வேண்டும் என தானது உடல் எடையை குறைத்து வந்தார்.

சமீபத்தில் கூட பல புகைப்படங்கள் வெளியானது, இந்த நிலையில் சிம்புவிற்கு ஒரு ஏணியாக இயக்குனர் மணிரத்தினம் படம் கிடைத்தது படத்தின் தலைப்பு செக்க சிவந்த வானம் இந்த படத்தில் ரவுடியாக நடிக்கிறார் சிம்பு ஆயிரம் சர்ச்சைகள் வந்தாலும் சிலுத்துகிட்டு நின்றாலே தனி மவுசுதான். இவரின் புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் இவரின் புகைப்படம் வந்து சிம்பு ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.