Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் முறையாக சிம்புவுடன் இணையும் மற்றொரு சைக்கோ நடிகர்! மிரளும் கோலிவுட்
தமிழ் சினிமாவில் உலகநாயகன் என கொண்டாடப்படும் கமலஹாசன் தனது குழந்தை பருவத்தில் இருந்து தற்போது வரை கலைத்துறையில் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் சைக்கோ கில்லராக கமலஹாசன் பிரமாதமாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்க விருக்கிறார்.
மனோஜ் சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தில், நடிகர் சிம்புவை கதாநாயகனாக தேர்ந்தெடுத்துள்ளார். அதேசமயத்தில் தற்போது உலக நாயகன் கமலஹாசனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.
இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் மற்றும் நடிகர்களை தேர்வு செய்தபின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன், சிம்பு போலீஸ் கெட்டப்பில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், ஒரு சில காரணங்களினால் சிம்பு அந்தப்படத்தில் கமலுடன் கூட்டு சேர முடியாமல் போனது.
தற்போது சிவப்பு ரோஜாக்கள் 2-வில் கமல்,சிம்பு கூட்டணியால், கரும்பு தின்ன கூலியா? என்று இந்தப் படத்தில் கமல் இணைந்ததற்கு ரசிகர்கள் துள்ளி குதித்து கொண்டாடி வருகின்றனர்.
