Tamil Cinema News | சினிமா செய்திகள்
புரட்சி இயக்குனருடன் களமிறங்கும் சிம்பு.. இது வேற லெவல் படம்
தேர்தலுக்கு பின் பட்டைய கிளப்பும் சிம்பு சீமான்
சீமான் தனது அரசியல் பாதையில் ஆழமாக இருப்பதால் தற்போது இயக்குவதற்கான பணிகளை சற்று தள்ளி வைத்துள்ளார். தற்போது அவர் நடித்து வெளிவர இருக்கும் படம் தவம். இப்படம் இயற்கை, விவசாயம் மற்றும் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலைகளை எடுத்துரைக்கும் படமாக இருக்கும்.
அவர் ஒரு பேட்டியில் கூறுகையில் ‘சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.’ அப்படத்தில் அவர் டாக்டராக நடிக்க உள்ளதாகவும் கூறினார். அந்தப்படம் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின் தொடங்கவிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்படத்தில் சமுதாயத்தில் நடக்கும் அவல நிலைகள் மற்றும் அரசியல் சார்ந்த கதையாக அமைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன்பின் மாநாடு என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுந்தர் மற்றும் சீமான் இணையும் இந்தப்படம் தேர்தலுக்குப் பின் ஒரு வரலாற்றை அமைக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
