Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேற லெவலில் வேட்டையாடப்போகும் சிம்பு.. விக்ரமின் மாஸ் ஹிட் இயக்குனருடன் கைகோர்ப்பு
ஒரு காலத்தில் இளம் பெண்கள் மற்றும் கதாநாயகிகளின் கனவுக் கண்ணனாக வாழ்ந்தவர் தான் சிம்பு. சமீபத்தில் வெளிவந்த இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் இவரை விட்டு ரசிகர்கள் நீங்காமல் இருக்கிறார்கள்.
இந்த மாஸ் கூட்டத்தைப் பார்த்து பல இயக்குனர்கள் சிம்புவை வைத்து படம் எடுக்க ரெடியாக உள்ளார்கள். ஏன் இன்று தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூட சிம்புவிற்கு ஒரு கதை சொன்னவர் தான்.
தன்னுடைய சோம்பேறி தனத்தினால் மட்டுமே சினிமாவை விட்டு விலகியிருந்த சிம்பு தற்போது சினிமாவில் புதிதாக வரும் அனைவரும் சீன் போடுவதால் மீண்டும் சினிமாவில் ஒரு கலக்கு கலக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என முடிவெடுத்து விட்டார் போல.
வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தை முடித்த பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப்படம் கைகூடவில்லை என்றால் உடனடியாக விக்ரம் இயக்குனருடன் கைகோர்க்க உள்ளார்.
விக்ரம் இரண்டு வேடங்களில் வித்தியாசமாக நடித்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இருமுகன். இந்த படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் தற்போது சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எப்படியோ சிம்புவுக்கு புத்தி வந்து விட்டது என அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சினிமாவில் புதிதாக நுழைந்த புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்து விட்டதாகவும் அதனை ஒடுக்க சிம்பு தான் யார் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
