simbu-gv-prakashஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது.

தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். சிம்புவை சந்தித்து கதையை சொல்லியிருக்கிறார். அவரும் நடிக்க சம்மதம் தெரிவிக்கவே, மே 1ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். படத்தை ரெபில் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தீபன் பூபதி தயாரிக்க இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  ஒரே கதையில் தயாராகும் சிம்பு,விஜய் சேதுபதி படங்கள் ?

இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ‘காளை’ படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கவிருக்கும் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

அதிகம் படித்தவை:  அஜித்,விஜய் மற்றும் நயன்தாராவை பற்றி முதல் முறையாக மனம் திறந்த சிம்பு.!

3 கெட்டப்களில் நடிக்கவிருக்கும் சிம்புவுக்கு ஜோடியாக 3 நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சிம்புவுடன் நடிக்கவிருக்கும் நடிகைகள், நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிம்புவை இயக்கிவிட்டு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்