Tamil Cinema News | சினிமா செய்திகள்
டைரக்டர் கௌதம் மேனனுக்கு புடிச்ச ஹீரோ யார் தெரியுமா? அதிசயத்தின் ஆச்சரியம்
டைரக்டர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர். இன்று முன்னணி நாயகர்களாக இருக்கும் சூர்யா, அஜித், கமல், சிம்பு போன்றவர்களுக்கு முக்கியமான கட்டத்தில் சூப்பர்ஹிட் படங்களை வழங்கியவர் என்றால் மிகையாகாது.
இவருடைய படங்கள் பெரும்பாலும் கொஞ்சம் காதல், அதில் கொஞ்சம் மோதல், அழகிய பாடல்கள் என இளைஞர்களை கவரக் கூடிய அத்தனை விஷயங்களும் அச்சுப்பிசகாமல் இருக்கும். தனுஷை வைத்து இவர் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா படம் அவரை நோக்கியே பாய்ந்துவிட்டது போல. ரிலீஸ் செய்ய முடியாமல் வருடக்கணக்கில் இழுத்து வருகிறார்.
சமீபகாலமாக இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுப்பதில் மும்முரமாக இருந்து வருகிறார். அந்த வகையில் ஒரு யூடியூப் சேனலில் யாருடன் உங்களுக்கு வேலை செய்வது ஈசியாக உள்ளது? என்று கேட்டதற்கு சிம்பு என பதில் அளித்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஆச்சரியப்பட காரணம் என்னவென்றால், சிம்பு சூட்டிங் சரியாக வரமாட்டார் என்ற டாக் இருந்து வரும் நேரத்தில் சிம்பு தான் எனக்கு ஈசியாக வேலை வாங்க கூடியவர் என்று கூறியது அதிசயத்தின் ஆச்சரியமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
