Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த விஷயத்தில் சிம்புவாக மாறிய தனுஷ்.. தலையில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்கள்
Published on
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தயாரிப்பாளர்களிடம் அதிகமாக வம்பு வைத்துக் கொண்ட நடிகர் என்றால் அது சிம்பு மட்டும்தான்.
குறித்த நேரத்திற்கு படப்பிடிப்புக்கு செல்லாமல் அனைவரையும் அழித்து விடுவார் என பலரும் கூறி கேள்விப் பட்டிருக்கிறோம்.
ஆனால் தற்போது அப்படியே தலைகீழாக மாறி குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு தந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் சிம்பு.
ஆனால் தனுஷ் சிம்பு வாக மாறிய அவலம் தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னரெல்லாம் குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்த தனுஷ் தற்போது காலை சூட்டிங்கிற்கு மதியம் வந்து தயாரிப்பாளருக்கு சிரமத்தை கொடுக்கிறாராம்.
சில சமயங்களில் சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்புக்கு வராமல் இருந்து விடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

simbu-dhanush
