கசந்து போகும் மண வாழ்க்கை, ட்ரெண்டாகும் விவாகரத்து.. இதுக்கு சிம்பு எவ்வளவோ மேல்

Simbu: நேற்றிலிருந்து சமூக வலைத்தளம் மிகவும் பரபரப்பாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஜெயம் ரவி, ஆர்த்தியின் விவாகரத்து தான். திரைத்துறையில் ரசிக்கக்கூடிய சில ஜோடிகளில் இந்த தம்பதிகளும் ஒருவர்.

அப்படிப்பட்டவர்கள் திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி தான். சில மாதங்களாகவே இந்த விஷயம் மீடியாவில் புகைந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் நேற்று ஜெயம் ரவி அதை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இது போதாதா இப்போது யூட்யூப் சேனல்கள் அனைத்தும் ஜெயம் ரவியின் விவாகரத்தை பற்றி தான் பேசி வருகின்றன. சினிமா விமர்சகர்கள் இதற்கு என்ன காரணம்? அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நடந்தது என்ன? என ஆளாளுக்கு ஒரு கதையை கூறி வருகின்றனர்.

இதைத் தாண்டி தற்போது திரையுலகில் விவாகரத்து என்கிற கலாச்சாரம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. தமிழ் திரையுலகை பொருத்தவரையில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நாயகர்களை அப்படியே ஃபாலோ செய்வதுண்டு.

சிங்கிளாக என்ஜாய் செய்யும் சிம்பு

அப்படி இருக்கும்போது இது போன்ற விவாகரத்து தவறான முன்னுதாரணமாகும். தனுஷ், விஷ்ணு விஷால், ஜிவி பிரகாஷ் என ஆரம்பித்து இப்போது ஜெயம் ரவி வரை இது தொடர்ந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் கோலிவுட்டில் இந்த விவாகரத்து கலாச்சாரம் ஒரு ட்ரெண்டாக மாறி வருகிறது.

நினைத்தால் திருமணம் நினைத்தால் பிரிவு என்பது வெகு சுலபமாகிவிட்டது. இந்த விஷயத்தை பொறுத்த வரையில் சிம்பு எவ்வளவோ பரவாயில்லை. அவர் பற்றி ஏகப்பட்ட சர்ச்சையான செய்திகள் வெளி வந்திருக்கிறது. திரிஷா, நயன்தாரா என பல நடிகைகளுடனும் அவர் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார்.

அதேபோல் சில காதல் தோல்விகளும் அவருக்கு இருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்து பார்த்தால் ஒரு விஷயத்தில் அவரை பாராட்டலாம். அதாவது எந்த வற்புறுத்தலுக்காகவும் அவர் திருமணம் என்ற பந்தத்தை தேர்ந்தெடுக்கவில்லை.

சிங்கிளாகவே லைஃப்பை என்ஜாய் செய்து வருகிறார். இப்போது இருக்கும் நாயகர்கள் அவர் போல் இருந்து விடலாமே. எதற்காக காதல் கல்யாணம் என்ற டிராமா எல்லாம் என்பதுதான் இப்போது இந்த விவாகரத்து செய்தியை பற்றிய அனைவரின் கருத்தாக உள்ளது.

ஆனால் ஜெயம் ரவியின் விவாகரத்தை பொருத்தவரையில் அவர் கஷ்டப்பட்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவர் மனைவி, மாமியார் இருவரின் அதிகார தோரணை தான். இருந்தாலும் பிள்ளைகளுக்காகவாவது இந்த முடிவை அவர்கள் தள்ளி வைத்திருக்கலாம்.

கோலிவுட்டில் தலை விரித்தாடும் விவாகரத்து கலாச்சாரம்

- Advertisement -spot_img

Trending News