இது நம்ம ஆளு படம் இந்த வாரம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றே சிம்புவே மிகவும் எதிர்பார்க்கின்றார். ஏனெனில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு எந்த ஒரு அடிதடி, பன்ச் வசனம் இல்லாமல் நடிக்கும் படம். இதுக்குறித்து இவர் பிரபல ஆங்கில தளத்திற்கு கொடுத்த பேட்டியின் தமிழ் பதிப்பு இதோ…

இது நம்ம ஆளு எந்த மாதிரியான கதைக்களம்?

இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தியது தான், நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடி திருமணத்திற்காக 6 மாதம் காத்திருக்கிறார்கள், அந்த இடைவேளையில் இவர்களுக்குள் இருக்கும் காதல்-மோதலே படத்தின் கதை.

சிம்பு படத்தில் அடிதடி, பன்ச் இல்லாமலா?

ஆம், இந்த படத்தில் எந்த ஒரு பன்ச் வசனமும் கிடையாது, இப்படம் ஒரு பாண்டிராஜ் படமாகவே இருக்கும்.

மீண்டும் 10 வருடங்கள் கழித்து நயன்தாராவுடன் நடித்த அனுபவம்?

நயன்தாரா தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார், அவரும் இடையில் பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார். தற்போது பழைய உற்சாகத்துடன் இருக்கிறார்.

சிம்புவின் திருமணம் எப்போது, ஏதும் விசேஷம் உள்ளதா?

திருமணத்திற்கு தற்போது நான் தகுதியான ஆளா என்று தெரியவில்லை, ஆனால், இந்த படத்திற்கு பிறகு எனக்கு திருமணம் ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது, அந்த அளவிற்கு இந்த படத்தில் பெண்களுக்கு என் கதாபாத்திரம் பிடிக்கும்.

போடா போடிக்கு பிறகு பெரிய இடைவேளி எப்படி பார்க்கிறீர்கள்?

கண்டிப்பாக எல்லோரும் இதை ஒரு குறையாகவே கூறினார்கள், ஆனால், இதையும் நான் நல்லதுக்கே என்று பார்க்கிறேன், இனி இதுபோல் நடக்காது.