simbu

நீங்கள் – கவுதம் மேனன் கூட்டணி என்றதுமே ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை ‘அச்சம் என்பது மடமையடா’ எந்த வகையில் பூர்த்தி செய்யும்?

‘அச்சம் என்பது மடமையடா’ படத் திலும் கவுதம் மேனன் புதிதாக ஒரு விஷ யம் முயற்சி செய்திருக்கிறார். ஓர் இயக்கு நராக அதைச் செய்ய மிகப்பெரிய தைரி யம் வேண்டும். இதை கவுதம் சார் வெற்றி கரமாக செய்வார் என்று மிகுந்த நம் பிக்கை வைத்தேன். எங்கள் கூட்டணி இந் தப் படத்திலும் கண்டிப்பாக பேசப்படும்.

படம் வெளியானவுடன் சினிமாக்காரர் கள், ரசிகர்கள், மக்களுக்கு கண்டிப்பாக ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அனைவருமே ‘புதிது’ என்ற வார்த் தையை அடிக்கடி பயன்படுத்துகிறார் கள். ‘புதிது’ என்றால் உண்மையில் இதுதான். கவுதம் சார் எடுத்திருக்கும் புது முயற்சியை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

நீங்கள் படப்பிடிப்புக்கு வரவில்லை. படமும் தாமதம் என பிரச்சினைகளுக்குள் சிக்கிக்கொண்டதே…

கவுதம் சார் ஒரு பிரச்சினையில் இருக் கும்போதுதான் இந்தப் படத்தையே தொடங்கினோம். வழக்கமாக, பட வேலைகளில் இருக்கும்போது, தயாரிப் பாளர்களுக்கு வரக்கூடிய பிரச்சினை தான் அவருக்கும் வந்தது. என் தரப்பில் இருந்து எந்த அளவு உதவி செய்ய முடியுமோ, செய்திருக்கிறேன். அவர் அளித்த பேட்டியில் என்னைப் பற்றி தவறாகப் பேசிவிட்டார் என்பதற்காக நானும் அவரைப் பற்றி பேசவேண்டும் என்ற அவசியம் இல்லை. இதெல்லாம் அனைத்து படங்களின் இறுதியிலும் நடக்கக்கூடிய விஷயங்கள்தான். தற்போது எல்லா பிரச்சினையும் சுமுகமாக முடிந்து, விரைவில் படமும் வெளியாக இருக்கிறது.

ரஜினி கமல் போல உங்களுக்கும் தனுஷுக்கும்தான் போட்டியாக இருக்கும். ஆனால், தனுஷின் வளர்ச்சி இப்போது எங்கேயோ போய்விட்டதே..

முன்பு கமல் சாரின் படங்களில் ரஜினி சார் ஓரமாக நின்று நடித்திருப்பார். ‘இப்படி ஆகிடிச்சே’ என்று ரஜினி சார் அன்று நினைத்திருந்தால், ‘கபாலி’ படத்தின் விளம்பரம் விமானத்தில் வரும் அளவுக்கு இன்று வளர்ந்திருக்க முடியுமா? பெரிய ஆள், சின்ன ஆள் என்பது மேட்டர் இல்லை. எப்படி இருந்தாலும், அவர்கள் ‘ரஜினி கமல்’ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் மேட்டர்!

மேலும், தனுஷ் எவ்வளவு பெரிய உயரத்துக்குப் போகிறார் என்பது எனக்கு தேவையே இல்லை. அவர் எவ்வளவு உயரத்துக்குப் போனால் எனக்கென்ன? நான் என் வேலையை சரியாக செய் கிறேனா என்பதுதான் எனக்கு முக்கியம். அதற்கு மட்டும்தான் நான் ஆசைப்படு கிறேன். அவர் என்னைவிட பெரிய ஆளானால், நல்ல விஷயம்தானே. அவரும் தமிழ் சினிமாவில் உள்ள ஒரு கதாநாயகன். அவர் நன்றாக வளர்வதில் என்ன தவறு இருக்கிறது?

நிறைய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் மிகவும் பொறுமையாகவே இருப்பதன் காரணம் என்ன?

இனிமேல் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ‘அச்சம் என்பது மடமையடா’, ‘அன்பான வன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய இரு படங்களில் நடிக்கிறேன். நிறைய படங்கள் ஒப்புக்கொண்டு, ஒரு படம் வெளியாகாமல் சம்பளப் பிரச்சினை என்றெல்லாம் நிற்கவேண்டாம் என நினைக்கிறேன். ஒரு படத்தை ஒப்புக் கொண்டு அதிலேயே முழு கவனமும் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.

நடிகர் சங்கத் தேர்தலில் நின்றீர்கள். தற்போது நடிகர் சங்கத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

முதலில், நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அந்தக் காலகட்டத்தில் ஒரு விஷ யம் தேவைப்பட்டது. அதைச் சொல்ல வேண்டியது என் கடமை. அதனால் சொன் னேன், நின்றேன். மற்றபடி எனக்கும் நடிகர் சங்கத்துக்கும் எந்தவித பிரச்சினையும் கிடையாது. புதிய நிர்வாகிகள் வந்துவிட் டார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன செய்ய வேண்டும் என்பதில் மூக்கை நுழைக்க எனக்கு விருப்பம் இல்லை. என் வேலை நடிப்பது. அதை முழுமையாக செய்கிறேன்.

‘பீப்’ பாடல் பிரச்சினையின்போது உங் களுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாதர் சங்கங்கள் அதற்கு பிறகு எழுந்த சில விவகாரங்களில் எப்படி நடந்து கொண்டன?

மற்றவர்கள் பிரச்சினையின்போது ஏன் குரல் கொடுக்கவில்லை என நான் கேள்வி எழுப்ப அவசியம் இல்லை. சிம்பு மீது தவறா, அவர்கள் மீது தவறா என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டதால்… அதுவே போதும்.

ஆன்மிகத்தில் இறங்கிவிட்டதாகச் சொல் கிறீர்கள். ஆனால், இப்போதும் பார்ட்டி களில் உங்களைக் காணமுடிகிறதாமே…

யோகி, சாமியார்னா காவி வேட்டி கட் டிக்கிட்டு மலை மீது உட்கார்ந்திருக் கணும்னு நினைக்கிறீங்களா? கோட் ஷூட் போட்டு, ஒயின் குடிச்சிட்டும்கூட சாமியார்கள் இருப்பாங்க. ஆனால், அவர்கள் சாமியார் என்பது அவர்களுக்கு மட்டும் தெரியும். அதை உங்களுக்கு காட்டவேண்டிய அவசியம் கிடையாது.

வாழ்க்கையில் அனைத்துமே தேவை தான். ‘இது வேண்டாம்’ என்று நிராகரிப் பது வாழ்க்கை அல்ல. ஆன்மிகத்தில் நிறைய வழி இருக்கிறது. அதில் நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்று இருக்கிறது. ‘எதுவுமே தேவையில்லை; கடவுள் போதும்’ என்று போவது சந்நியாசம். நான் வாழும் வாழ்க்கையில் என்னால் சந்நியாசம் போக முடியாது. ஏனென்றால், என் வாழ்க்கை முறை வேறு. நான் எனக்கான ஆன்மிக வழியைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

தமிழ் சினிமாவின் தவறான சித்தரிப்புகளால் அசம்பாவித சம்பவங் கள் நிறைய நடப்பதாக குரல்கள் ஒலிக்கிறதே..

‘கொலை நடப்பதை பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதால்தான் மேலும் மேலும் கொலை நடக்கிறது’ என்று கூறி, 10 ஆயிரம் பொதுமக்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமா? இந்த மாதிரிதான் சினிமா மீதான குற்றச்சாட் டும். சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அதில் நல்லதும் சொல்வோம், கெட்டதும் சொல்வோம். எல்லாவற்றி லுமே நல்லதும், கெட்டதும் கலந்துதான் இருக்கும். நாம் சரியானதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறை சொல்லவேண்டும் என்றால் எதில் வேண்டுமானாலும் சொல்லலாம்!