fbpx
Connect with us

சிம்பு காயத்தால் தனுஷுக்கு நஷ்டமா?

சிம்பு காயத்தால் தனுஷுக்கு நஷ்டமா?

simbuகவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பில் நேற்று சிம்புவுக்கு மூக்கில் சிறுகாயம் ஏற்பட்டது என்பதை பார்த்தோம். ஸ்டண்ட் சில்வா அமைத்த சண்டைக்காட்சி ஒன்றில் டூப் இல்லாமல் ரிஸ்ட் எடுத்து சிம்பு நடித்தபோது இந்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் சிம்புவுக்கு ஏற்பட்டது சிறிய காயம்தான் என்றும், இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் படப்பிடிப்பு தொடரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை திட்டமிட்டபடி கவுதம் மேனன் முடித்தால்தான் தனுஷ் படத்தை சரியான நேரத்தில் தொடங்க முடியும் என்றும் இல்லையெனில் தனுஷின் கால்ஷீட் நஷ்டமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top